மாகாண அதிகாத்தை மத்திய அரசு பறிப்பதற்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்கியயுள்ளது இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம்.
Beaches & Islands
மத்திய கல்வி அமைச்சு ஏற்கனவே சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர மாகாணசபை அதிகாரத்திற்குட்பட்ட எவற்றையும் சுவீகரிக்கும் உத்தேசம் இல்லை என்ற எழுத்து மூல அறிவித்தலை சட்டமா அதிபரூடாக நீதிமன்றத்திற்கு சமர்ப்பித் துள்ளதாக வடமாகாணசபையின் முன்னாள் கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் பாடசாலைகளை தேசிய பாடசாலை என்ற பெயரில் மத்திய கல்வி அமைச்சு தனது நிர்வாகத்தின் கீழ் எடுப்பதற்கு சட்டத்தில் இடமில்லை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது
மாகாணசபை பாடசாலைகளை மத்திய அரசு சுவீகரிப்பதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முன்னர் சுவீகரிக்கப்பட்ட பாடசாலைகள் தவிர ஏனையவை பாடாசாலைகள் எவற்றினையும் சுவீகரிக்கப்படும் உத்தேசம் இல்லை என்ற மத்திய கல்வி அமைச்சு மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
அவ்வாறு மாகாணசபை பாடசாலைகளை கையகப்படுத்த முயற்சிப்பது சட்டவிரோதமானது . மத்திய கல்வி அமைச்சு நாடு தழுவிய வகையில் கையகப்படுத்த முனைந்த ஏறத்தாழ அறுநூற்றி ஐம்பது வரையான பாடசாலைகளும் குறிப்பாக வடக்கு மாகாணத்திலிருந்து எடுக்க முனைந்த நாற்பத்தியெட்டு பாடசாலைகளும் மத்திய அரசால் பறிக்கப்படாமல் தடுக்கப்பட்டிருக்கிறதெனவும் சர்வேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
