இலங்கையின் கிழக்கு மாகாணத்திற்கு அண்மைக் காலமாக விஜயம் செய்திருக்கும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் மற்றும் கனேடிய உயர்ஸ்தானிகர் ஆகியோர் கிழக்கு மாகாணத்திலுள்ள சிவில் அமைப்புப் பிரதி நிதிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரை சந்தித்து கிழக்கு மாகாண நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கிழக்கு மாகாணத்தில் நிலவும் நில உரிமை மற்றும் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பாக
இன்று (06.05.2026) சந்திப்பு திருகோணமலை யில் உள்ள Trinco Blu Hotel இல் இடம் பெற்றது.
விருத்தி வலையமைப்பின் ஏற்பாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட இச்சந்திப்பில் திருகோணமலை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள்,கிழக்கு மாகாணா நிலம் மீட்பிற்க்கான வலையமைப்பினர், சிவில் செய்ற்பாட்டாளர்கள் மற்றும் நிலம் இழந்த பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்பின் போது திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற காணி அபகரிப்புக்கள் தொடர்பாகவும், காணி தொடர்பாக மக்கள் எதிர் கொள்கின்ற சவால்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும்,
கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலின் இறுதியில் அரச தரப்பினரால் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி மகஜர் ஒன்று கிழக்கு மாகாண காணி மீட்பிற்கான வலையமைப்பினரால் உயர்ஸ்தானிகர்களிடம் கையளிக்கப்பட்டதுடன், இலங்கை அரசங்கத்திடம் இது தொடர்பாக கலந்துரையாடி தங்களுக்கான காணிகளை விடுவித்துத் தருமாறும் பாதிக்கபட்டவர்கள் வெளிநாட்டு இராஜதந்திரிக்களிடம் கேட்டுக் கொண்டனர்.
அதே நேரம் வடக்கு கிழக்கு சமூக இயக்கத்தின் ஒருங்கிணைப்ப்பாளர் கண்டுமணி லவகுசராசா மற்றும் பிரதி ஒருங்கிணைப்பாளர் அழகுராசன் மதன் ஆகியோர் இணைந்து வடக்கு கிழக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான வேண்டுதலை உள்ளடக்கிய மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேற்படி விடயங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்துடன் எதிர்வரும் காலங்களில் கலந்துரையாட முனைவதாக உயர்ஸ்தானிகர்கள் தெரிவித்தனர்.
