அமெரிக்கா மாகாணமான அலாஸ்காவில் உள்ள தொலைதூர இராணுவ ரேடார் தளத்தில் வியாழக்கிழமை அன்று நிகழ்ந்த வாடகை விமான விபத்தில் , அதில் பயணம் செய்த எட்டு பேரும் உயிரிழந்ததாக அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது.
விமானம் புறப்பட்ட இடமான , அலாஸ்காவின் மிகப்பெரிய நகரமான ஆங்கரேஜிலிருந்து மேற்கே சுமார் 725 கிலோமீட்டர் (450 மைல்கள்) தொலைவில் அமைந்துள்ள கேப் நியூவென்ஹாம் நீண்ட தூர ரேடார் தள விமான நிலையத்தை அணுகும்போது, அந்த விமானம் பிற்பகல் 12:15 மணியளவில் (2015 UTC) விபத்துக்குள்ளானது.
சம்பவத்தின் போது விமானத்தில் ஆறு பயணிகளும் இரண்டு விமானிகளும் இருந்தனர் என தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் (NTSB) அலாஸ்கா பிராந்தியத் தலைவர் கிளின்ட் ஜான்சன் தெரிவித்தார்.
அந்த விமானம், ஆங்கரேஜை தளமாகக் கொண்ட செக்யூரிட்டி ஏவியேஷன் என்ற விமான வாடகை நிறுவனத்திற்குச் சொந்தமான செஸ்னா 441 ரக விமானம் என அறிக்கைகள் அடையாளம் காட்டின.
