ஈரான் மற்றும் பெய்ஜிங் உள்ளிட்ட அதன் வர்த்தகப் பங்காளிகளுக்கு எதிரான பொருளாதாரத் தடைகளை விரிவுபடுத்தும் திட்டங்களை அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, தனது நலன்களைப் பாதுகாப்பதாக சீனா உறுதியளித்துள்ளது.
சட்டவிரோத ஒருதலைப்பட்சத் தடைகள் என்று சீனா அழைப்பதை உறுதியாக எதிர்ப்பதாகவும், தனது உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துத் தேவையான நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறினார்.
ஈரானுடன் நிதி ரீதியாகக் கூட்டு சேரும் எந்தவொரு நாடும் தனிமைப்படுத்தப்படும் என எச்சரித்து, அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட் திங்களன்று புதிய நடவடிக்கைகளை அறிவித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்துள்ளது.
ஈரானிய எண்ணெயின் மிகப்பெரிய வாங்குபவர் சீனாதான்; இருப்பினும், ஈரானின் துறைமுகங்கள் மீதான அமெரிக்க முற்றுகையால் இந்த வர்த்தகம் குறைந்துள்ளது.
சீனாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான ஒத்துழைப்பு எப்போதுமே சர்வதேச சட்டத்தின் வரம்புகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டு வருகிறது, அதில் தலையிடவோ அல்லது சீர்குலைக்கவோ கூடாது என்று லின் கூறினார்.
ஈரானுக்கு எதிரான இதுவரை இல்லாத மிகப்பெரிய நிதித் தாக்குதல்” என்று இந்தத் தடைத் திட்டங்களை விவரித்த பெசென்ட், அந்நாட்டுடனான உறவைத் துண்டிக்க மறுத்தால் வங்கிகளும் வணிக நிறுவனங்களும் ஈரானின் தனிமைப்படுத்தலில் பங்கு கொள்ளும் என்றும் எச்சரிந்த இருந்த நிலையில் சீனாவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
