உக்ரைனின் தலைநகர் கீவ் நகரில் சனிக்கிழமையன்று துப்பாக்கி ஏந்திய நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டதாகவும், பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த இளம் பெண் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். துப்பாக்கிதாரியும் கொல்லப்பட்டார்.
தாக்குதல் நடத்தியவர் சிலரையும் பிணைக் கைதிகளாகப் பிடித்தார். பாதுகாப்புப் படையினர் அவருடன் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று அந்தக் கொடூரமான தாக்குதல் குறித்து ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி பதிலளித்தார்.
ஒரு பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த தாக்குதல்தாரியைக் கைது செய்வதற்காக அதிகாரிகள் ஒரு சிறப்பு நடவடிக்கையை” தொடங்கியுள்ளதாக கீவ் மேயர் விட்டாலி கிளிச்கோ தெரிவித்தார்.
துப்பாக்கிதாரியைக் கைது செய்யும் முயற்சியின்போது அவர் கொல்லப்பட்டதாக உக்ரைனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ பின்னர் அறிவித்தார்.