டாக்டர் ரோஷ் ஜலக்கே, 14 மணி நேரம் இடைவிடாமல் பறக்கக்கூடிய கல்ஃப்ஸ்ட்ரீம் சூப்பர் ஜெட் விமானத்தில் இலங்கைக்கு வந்துள்ளார்.
ஒரு இலங்கையருக்குச் சொந்தமான முதல் அதி-நீண்ட தூரம் செல்லும் தனியார் ஜெட் விமானம் சமீபத்தில் ரத்மலான சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி, நாட்டின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அவுஸ்ரேலியாவின் பெர்த்திலிருந்து இலங்கைக்கு நேரடியாக தனது முதல் பயணத்தை மேற்கொண்ட இந்த சூப்பர் ஜெட் விமானத்தின் உரிமையாளர், அவுஸ்ரேலியாவில் வசிக்கும் ஒரு முக்கிய இலங்கை கோடீஸ்வர தொழிலதிபரும், ரோஷனா கேர் குரூப் வணிக வலையமைப்பின் நிறுவனருமான டாக்டர் ரோஷ் ஜலக்கே ஆவார்
