கொழும்பில் இனம் தெரியாத கும்பல் ஒன்று வீட்டுக்கு தீ வைத்ததில் வீட்டில் இருந்த தாயும் மகளும் உயிரிழந்துள்ள நிலையில் தந்தையும் , வீட்டின் உரிமையாளரும் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மஹரகம பகுதியில் உள்ள வீடொன்றில் வசிக்கும் 75 வயதுடைய முதியவர் , தனது வீட்டினை கணவன் – மனைவி மற்றும் மகள் ஆகிய குடும்பத்தினருக்கு வாடகைக்கு வழங்கி , தானும் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றைய தினம் இனம் தெரியாத கும்பல் ஒன்று அவர்களது வீட்டிற்கு தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளனர்.
வீடு தீப்பற்றி எரிவதை கண்ட அயலவர்கள் , பலத்த போராட்டத்தின் மத்தியில் தீயை அணைத்து வீட்டின் உரிமையாளரான முதியவரையும் , வீட்டில் வாடகைக்கு இருந்த குடும்பத்தில் கணவனையும் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
வீட்டின் அறை ஒன்றில் 55 வயதுடைய தாயும் , அவரது 16 வயதுடைய மகளும் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.