சந்தங்கள் இணையவே வந்த பாடல்
சரிகம சுரங்களில் எழுந்த பாடல் – உலகில்
விந்தைகள் என்ன? இயற்கை கோலம்!
விதவிதமாய் பாடல் ஒலிக்கக் கேட்கும்
மனதினில் தோன்றும் இன்ப யாகம்.
அலைகடல் ஓசை அது ஒரு ராகம்
ஆடிடும் தென்னையில் எழுவதும் நாதம்
குழல் இசை கேட்டால் அதில் வரும் கானம்
வையகம் எல்லாம் மயங்குதே பாரும்!
இசை எனும் வடிவம் இயற்கையின் வடிவம்
இறைவனும் கூட அதனுள் சரணம்.
பறவையின் மொழியில் எழுந்திடும் கானம்
பண்ணிசை தன்னில் மனம் மகிழ்ந்தாடும்
குயிலிசை கூவல்; அதில் வரும் நாதம்
கும்மியில் எழுந்திடும் இசையுடன் தாளம்
குழந்தைக்குத் தாலாட்டு குமரிக்குப் பாட்டு
கூடிடத் தமிழ்மொழி இணைந்ததே இப்பாட்டு!
ஆக்கம் ஈழத்து இசைத்தென்றல் சிறுப்பிட்டி எஸ்.தேவராசா (30.07.2026)
