வலி. வடக்கில் ஒரு சில வாரங்களில் பெருமளவான காணிகளை அரசாங்கம் விடுவிக்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , தோற்றுப்போன அரசியல்வாதிகள் , காணி விடுவிப்பு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுத்து , தமது போராட்டங்கள் ஊடாகவே காணி விடுவிக்கப்பட்டது போன்றதான வங்குரோத்து அரசியலை செய்ய முற்படுகின்றனர் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சாட்டியுள்ளார்
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்,
பலாலி மற்றும் குரும்பசிட்டி பகுதிகளில் உள்ள விவசாய மற்றும் குடியிருப்பு காணிகள் உடனடியாக மீளளிக்கப்படுவதுடன், மக்கள் அங்கு வீடுகளைக் கட்டிக்கொள்வதற்கான முழுமையான அனுமதி வழங்கப்படவுள்ளது.
மேலும், 1981 மற்றும் 1988ஆம் ஆண்டுகளில் சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கு தற்போதைய சந்தை மதிப்பிட்டின்படி இழப்பீடு வழங்கப்படுவதுடன், அவர்கள் அக்காணிகளைப் பயன்படுத்த முடியாமல் போன காலத்திற்கான கூடுதல் நஷ்டஈடும் வழங்க ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் தேவைப்படும் 13,000 வீடுகளையும் முழுமையாகக் கட்டிமுடித்து “மீள்குடியேற்ற வீடுகள்” எனும் நாமத்தையே நாட்டின் வரலாற்றில் இருந்து அகற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தபோது காணி விடுவிப்பைப் பற்றிப் பேசினால் தென்னிலங்கை கொதித்துவிடும் என்று கூறி அமைதி காத்த தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் போன்ற தலைவர்கள், தற்போது காணி விடுவிப்பு அரசாங்கத்தால் உறுதியாகியுள்ள நிலையில் போராட்டங்களை அறிவித்து அரசியல் நாடகமாடுகின்றனர்.
ஆன்லைன் மொழிபெயர்ப்பு கருவிகளைத் தேர்ந்தெடுத்தல்
மக்கள் இனிமேலும் இத்தகைய அரசியல்வாதிகளின் பகடைக்காய்களாக மாற மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு என தெரிவித்தார்.
