பயணக் கொடுப்பனவை உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, கிராம உத்தியோகத்தர்கள் நாளை (10) மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரண்டு நாட்களும் சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் தலைவர் நந்தன ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு காரணமாக கிராம உத்தியோகத்தர்களின் சேவைகள், சான்றிதழ் வழங்கல் மற்றும் காணி தொடர்பான பணிகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உடனடியாக 20 லீற்றர் எரிபொருளுக்கு நிகரான பயணக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாகும்.
இந்தப் பணிப்புறக்கணிப்பு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
