பாலஸ்தீன் நாட்டின் ஜெனின் நகரத்தில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில், ஹமாஸின் மூத்த தளபதி எனக் கூறப்படும் கைஸ் பிடாவி மற்றும் மேலும் இருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடந்த உடனே, இஸ்ரேலியப் படைகள் கூடுதல் படைகளை அனுப்பி, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரில் குறிவைக்கப்பட்ட இடத்தைச் சுற்றித் தடுப்புகளை அமைத்ததாக தெரியருகிறது.
அதன்போது, தாக்குதல் நடந்த இடத்திற்குத் தங்கள் மருத்துவக் குழுவினர் வந்தபோது, இஸ்ரேலிய இராணுவம் அவர்களைத் தடுத்து நிறுத்தியதாக பாலஸ்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
