மரண அறிவித்தல்
திருமதி சோபனா டினேஷ்குமார்
தோற்றம் 01.12.1989/மறைவு06.06.2026
சாவகச்சேரி, மீசாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு பம்பலப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி சோபனா டினேஷ்குமார் (முகாமைத்துவ உதவியாளர்) அவர்கள் கடந்த (06.06.2026) சனிக்கிழமை இறைபதம் எய்தினார்.
அன்னார் சண்முகலிங்கம்
யோகராஜமலர் தம்பதியரின் அன்பு மகளும், சதாசிவமூர்த்தி – கனகம்மா தம்பதியரின் அன்பு மருமகளும், டினேஷ்குமாரின் (பொறியியலாளர் தெகிவளை கல்கிசை, மாநகரசபை) பாசம் நிறைந்த துணைவியும், பிரணவ், ஆரத்யாவின் உயிர் கலந்த அன்னையும், தீபா (பிரான்ஸ்), கபிலன் (லண்டன்), ரூபா (லண்டன்), நிஷாந்தி (லண்டன்) ஆகியோரின் சகோதரியும், குமுதினி (சிட்னி), குணாளினி (லண்டன்), நந்தீசன் (கொழும்பு). உதயணன் (AL 6011). பகீரதன் (பிரான்ஸ்), பத்மறாஜி, கேதீஸ்வரநாதன், ஐங்கரன் (லண்டன்) ஆகியோரின் அன்புள்ள மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் நாளை (09.06.2026) செவ்வாய்க்கிழமை மு.ப 09:00 மணிமுதல் பொரளை ஜயவர்த்தன பார்லரில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் இறுதிக்கிரியைகள் நடைபெற்று பொரளை இந்து மயானத்தில் தகனக்கிரியைகள் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தகவல்: குடும்பத்தினர்
