எதிர் வரும் சனிக்கிழமை 22.08.2026 வெற்றிமணி வெளியிடாக வெளிவந்த மூன்று நூல்களின் அறிமுக விழா யேர்மனி யில், நடைபெறவுள்ளது. மேற்படி விழா Dortmund நகரில் தமிழர் அரங்கத்தில் மலை 4.30 மணிக்கு இடம் பெறும்.
ஐரோப்பிய தமிழ் வானொலி அதிபர் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் பிரதம விருந்தினராக கலாசூரி திவ்யா சுஜேன் அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
சிறப்பு விருந்தினராக வானதி நர்த்தனாலய அதிபர் நாட்டிய ஆச்சரியமணி வானதி தேசிங்குராஜா அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்.
நூல் நயம்
கண்ணாவின் “கோடுகளும் கோலங்களும்”
எழுத்தாளர் வி. சபேசன்.
திவ்யா சுஜேன் அவர்களின் நின்னைச் சரணடைந்தேன்
நூல் நயம் : வயவை லம்போ
மாதவியின் “வில்லனாக இருந்த கணப்பொழுதுகள்”
எழுத்தாளர். கெளசி சிவபாலன்
நடனம், மெல்லிசை நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற உள்ளன.
வெற்றிமணி பத்திரிகை யின் 33 நூல்
நின்னைச் சரணடைந்தேன் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சி தொகுப்பாளர்களாக சகநாயகன் சி சக்திவேல், நிரா சுரேஷ் லண்டன் SRS தமிழ் வானொலி அறிவிப்பாளர்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
வெற்றிமணி யேர்மனி
