யாழ்பாணம், உடுவில் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் பெண் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியான துயரச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் குறித்த அலுவலகத்தில் சுதேச மருத்துவ அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தாயான நிசாந்தன் சிந்துப்பிரியா (வயது 37)என்பவரே பலியானவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.
அரச அலுவலகங்களுக்கிடையிலான உற்பத்தி திறன் போட்டியில் கலந்து கொள்ளும் பொருட்டு அலுவலகங்களை அழகுபடுத்தும் பணியில் குறித்த பிரதேச செயலகமும் ஈடுபட்டு வருகின்றது எனவும்,
நாளை திங்கட்கிழமை போட்டிக்கான மதிப்பீடுகள் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை அலுவலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் கடமைக்கு அழைக்கப்பட்டனர் எனவும்,
இதன்போதே குறித்த பெண் உத்தியோகத்தர் மூலிகைத் தோட்டத்திற்கு நீர் பாய்ச்சிய வேளை, அப்பகுதியில் இருத்த மின் கசிவு தண்ணீருடன் கலந்து அவரை தாக்கியதாகவும் தெரிய வருகின்றது.
சம்பவத்தை தொடர்ந்து அவரது உடல் மீட்கப்பட்டு தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது .
எனினும் அங்கு அவரு முன்னரே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டு சடலம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Weniger anzeigen
