இத்திரைப்படத்தின் காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றிய இவர், சிறந்த திறமையும் ஆர்வமும் கொண்ட ஒரு இளம் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த நடிகையாகவும் தன்னை நிரூபித்தவர்.
நடிகர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இவரது நடிப்புத் திறமையை நான் நேரில் பார்த்து வியந்தேன். அதனால், காஸ்ட்யூம் டிசைனராக மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தில் ஒரு
கதாபாத்திரத்திலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு வழங்கினேன். அந்த வாய்ப்பை தனது திறமையான நடிப்பின் மூலம் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.
அதே நேரத்தில், நடிகர்களுக்கான ஆடைத் தேர்வு, கதாபாத்திரங்களுக்கு ஏற்ற உடை வடிவமைப்பு என பல்வேறு பணிகளில் மிகுந்த ஈடுபாட்டுடனும் பொறுப்புடனும் செயல்பட்டார். ஒரு உடையைத் தேர்வு செய்த பிறகு மீண்டும் மீண்டும் மாற்றங்கள் செய்து, பல விதமான உடைகளைப் பரிசீலித்தபோதும், எந்தவித சலிப்பும் இன்றி பொறுமையுடனும் முழுமையான ஒத்துழைப்புடனும் பணியாற்றினார்.
காஸ்ட்யூம் டிசைன் மற்றும் நடிப்பு மட்டுமல்லாமல், இத்திரைப்படத்தின் பல்வேறு பணிகளிலும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளார். அனைவருடனும் நட்பாகவும் அன்பாகவும் பழகி, ஒரு குழுவாக இணைந்து பணியாற்றிய விதம் பாராட்டுக்குரியது.
மேலும், இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்திற்குத் தனது குரல் வளத்தால் குரல் கொடுத்து, சிறப்பாக டப்பிங்கும் செய்துள்ளார்.
அவரது திறமைகள் மேலும் மேலும் வளர்ந்து, கலைத்துறையில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற வேண்டும்.
அன்பும் பாராட்டுகளும் கலந்த இனிய வாழ்த்துக்கள்
