அன்று புலி என்றார்கள் இன்று ஆட்சி ஆசையில் புலி என்பவரை மேடையில் ஏற்றுகிறார்கள் இது தான் அவர்களுடைய அரசியல் விளையாட்டு என விமர்சித்துள்ளார் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க.
மகிந்த குடும்பத்தை வேட்டையாடும் அனுர அரசின் அடுத்து நகர்வாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ச இலக்கு வைக்கப்பட்டுள்ளர்.
சிராந்தி நடத்தும் கார்டன் முன்பள்ளிக்கு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இரண்டு சொகுசுப் பேருந்துகளை வழங்கியதில் நடந்த ஊழல் மற்றும் நிதி முறைகேடுகள் குறித்து, இலஞ்சம் அல்லது ஊழல் புலனாய்வு ஆணையமும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் ஒரு கூட்டு விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்ட உண்மைகளின் அடிப்படையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்வதற்குப் போதுமான சான்றுகள் உள்ளன என்று நிதியியல் புலனாய்வுப் பிரிவு வழங்கிய அறிவுறுத்தல்களைத் தொடர்ந்து, சட்டமா அதிபர் திணைக்களமும் முறைகேடுகள் குறித்து ஒரு முறையான விசாரணையைத் தொடங்கியுள்ளது.
