O/L இல் சாதனை படைத்த 17 வயது மாணவி திடீர் உயிரிழப்பு! மட்டக்களப்பில் சோகத்தில் மூழ்கிய சுங்காங்கேணி கிராமம்
மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதான S. சதுமியா என்ற மாணவி சுகவீனம் காரணமாக இன்று (25) திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோக அலையை ஏற்படுத்தியுள்ளது.
மட்/ககு/ சுங்காங்கேணி வலம்புரி விநாயகர் வித்தியாலயத்தில் தரம் 12 இல் கல்வி பயின்று வந்த இம்மாணவி, அண்மையில் வெளியான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று உயர்கல்வியைத் தொடர ஆயத்தமாகி வந்தவர்.
திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில், துரதிர்ஷ்டவசமாக இன்று(25-08-2026) அவரது உயிர் பிரிந்தது.
பல கனவுகளோடு வலம் வந்த ஒரு திறமைமிக்க மாணவியின் இந்த எதிர்பாராத இழப்பு, அவர் பயின்ற பாடசாலைச் சமூகத்தையும், சுங்காங்கேணி கிராம மக்களையும் பேரதிர்ச்சியிலும் ஆழ்ந்த துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையப் பிரார்த்திப்பதோடு, அவரது பிரிவால் தவிக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன
