இன்று ஐ.ஆர்.ஜி.சி-யின் கடற்படையால் குறைந்தது இரண்டு கப்பல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இன்று காலை ஹோர்முஸ் ஜலசந்தியில் விதிமீறலில் ஈடுபட்ட இரண்டு கப்பல்களைத் தங்கள் கடற்படை அடையாளம் கண்டு தடுத்து நிறுத்தியதாக ஐஜிஆர்சி தெரிவித்துள்ளது.
தெஹ்ரான் பயணம்
அந்தக் கப்பல்கள் அனுமதியின்றி இயங்கி, விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறி, வழிசெலுத்தல் உதவி அமைப்புகளைக் கையாண்டு, கடல்சார் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஹோர்முஸ் ஜலசந்தியிலிருந்து இரகசியமாக வெளியேற முயன்றன என்று ஓர் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த இரண்டு கொள்கலன் கப்பல்களும் ஈரானியக் கடற்கரைக்குத் திருப்பி விடப்பட்டதாக அது மேலும் தெரிவித்தது.
அந்த இரண்டு கப்பல்களும் எம்.எஸ்.சி ஃபிரான்செஸ்கா மற்றும் எபமினோண்டாஸ் என ஈரானிய ஒளிபரப்பு நிறுவனமான ஐ.ஆர்.ஐ.பி டெலிகிராமில் பதிவிட்டுள்ளது. ஃபிரான்செஸ்கா இஸ்ரேலுடன் தொடர்புடையது என்றும், எபமினோண்டாஸிடம் தேவையான அனுமதிகள் இல்லை என்றும், அது வழிசெலுத்தல் அமைப்புகளில் முறைகேடு செய்து வந்தது என்றும் அது கூறியுள்ளது.
கப்பல்களைக் கண்காணிக்கும் தளமான மரைன்டிராஃபிக், புதன்கிழமை அன்று ஈரானியக் கடற்கரைக்கு அருகே அந்தக் கப்பல்கள் நிறுத்தப்பட்டிருந்ததைக் காட்டியது.