இலங்கைக்கு கடத்துவதற்காக பிரப்பன்வலசை கடற்கரைக்கு வேனில் கொண்டு வரப்பட்ட 297 கிலோ கஞ்சா பொட்டலங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் உட்கோட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பிரப்பன்வலசை கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தப்பட்டிருந்த வேனை சோதனையிட்டபோது, அதில் 297 கிலோ கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கஞ்சா பொட்டலங்களுடன் வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 670 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடத்தலுடன் தொடர்புடையவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
