இலங்கை ஜனாதிபதி சீன முதலீட்டாளர்களுடன் சந்திப்பொன்றை கொழும்பில் நடத்தியுள்ள நிலையில் ஜேவிபியின் செயலாளர் டில்வின் சில்வாவுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுக்கும் இடையிலான அவசர சந்திப்பு, ஜனதா விமுக்தி பெமுனவின் பெலவத்தை தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
Travel Guides & Travelogues
சந்திப்பின்போது, சமீபகாலமாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே வளர்ச்சியடைந்த ராஜதந்திர மற்றும் கலாச்சார உறவுகள் குறித்துக் கலந்துரையாடப்பட்டதாக ஊடகங்களிற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இந்தியாவின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு தொடர்பிலும், இலங்கையின் சர்வதேச அரசியல் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பிலும் பேசப்பட்டதாக கூறப்படுகின்றது.
சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிரிவின் முதல் செயலாளர் ரம்பாபு செல்லப்பா மற்றும் ஜேவிபியின் வெளிநாட்டு விவகாரப் பிரிவைச் சேர்ந்த கல்பனா மதுபாசிணி ஆகியோரும் கலந்துகொண்டதாக கூறப்படுகின்றது.
அண்மையில் புதிய இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரது கொழும்பு விஜயத்தை தொடர்ந்து டில்வின் சில்வா டெல்லிக்பு பயணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
