அனுராதபுரம் பொதுக்கூட்டம் மூலம் சிறையிலுள்ள நாமல் ராஜபக்சவிற்கு புத்துயிர் ஊட்ட முயற்சிகள் முன்னெடுக்கப்பட பணச்சலவை விசாரணையின் அடிப்படையில், நாமல் ராஜபக்சவை சந்தேகநபராக இன்றிரவு பெயரிடப்பட்டுள்ளார்.
சிறிலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் ரக விமானங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் நிதி முறைகேடுகள் தொடர்பாகவே நாமலினை தண்டிக்க முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது.
சிறீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்திற்காக எயார்பஸ் ரக விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட கொடுக்கல்வாங்கலில் பெருமளவிலான நிதி முறைகேடுகள் மற்றும் ஊழல் இடம்பெற்றுள்ளதாக நீண்டகாலமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கொள்முதல் விவகாரத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோதப் பணப் பரிமாற்றங்கள் மற்றும் பணச்சலவை (ஆழநெல டுயரனெநசiபெ) தொடர்பான விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டே, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிடுவதற்கான சட்ட நடவடிக்கைகளை சட்டமா அதிபர் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.
