செம்மணி மனித படுகொலைக்கு நீதி வேண்டி கொழும்பு புறக்கோட்டை புகையிரத நிலையம் முன் கவணயீர்ப்பு போராட்டம்.
இன்று 30.07.2026 பி.ப 3.30 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக கூடிய சமயத் தலைவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக தோண்டி எடுக்கப்பட்டு வரும் மனித என்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் இந்த அரசாங்கம் எது வித நீதி விசாரணைக ளையும் மேற்கொள்ளாது காலத்தை இழுத்தடித்து நலுவல் போக்கை கடைப்பிடித்து வருவதாக தெரிவித்தனர்.
அத்துடன் மேற்படிப் பகுதியானது சில காலத்துக்கு காலம் இந்திய இரானுவம்,
இலங்கை இரானுவம், மற்றும் விடுதலைப் புலிகள் ஆகியோரது கட்டுப்பாட்டுப் பிரதேசமாக இருந்த தாகவும் ஆகையினால் யாரால் இது நடாத்தப் பட்டிருக்கலாம் என உறுதியாக கூற முடியாதுள்ளதாகவும் அன்மையில் சிறிலங்காவின் நீதி அமைச்சர் அவர்கள் கூறியிருந்தார்.
மேற்படி கருத்தானது பொறுப்புக் கூறலில் இருந்து இந்த அரசு விலகிச் செல்ல எத்தனிப்பதை எடுத்துக் காட்டுவதாக போராட்டக் காரர்கள் தெரிவித்தனர்.
மேற்படிப் போராட்டமானது அருட் தந்தை சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிய தலைவர் ச.சிவயோகநாதன் அவர்களும் கலந்து கொண்டார்.
