நாட்டுக்கு அனுராவே தேவை. ஒரு மக்களால் தேர்வு செய்யப்பட்டவனை தனிமையாக எதிர்க்க முடியாமல் தம்மை காக்க கூட்டு சேரும் பன்றிக்கூட்டம் வேண்டாம்.
அனுரா மட்டும் இலங்கைக்கு போதும் நாட்டை முன்னேற்ற. இந்த அனுர அரசு இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும்.
அதற்கு மக்களின் ஆதரவும் இறைவனின் துணையும் இருக்க வேண்டும். ஆட்சியைக் கவிழ்க்க தனித்தனியாக முயன்று முடியாதவர்கள், இன்று கூட்டணி அமைத்து முயற்சிக்கிறார்கள்.
ஆனால் அனுர அரசை வீழ்த்த நினைப்பவர்கள் உண்மையில் மக்கள் நலனுக்காகச் செயற்படுகிறார்களா என்பதை மக்கள் சிந்திக்க வேண்டும்.
கடந்த காலங்களில் ஊழல், காணி அபகரிப்பு, போதைப்பொருள் வியாபாரம், பாதாளக் குழுக்கள், கடத்தல், கொள்ளை, லஞ்சம், இன–மத முரண்பாடுகள் போன்றவற்றால் நாடு பெரிதும் பாதிக்கப்பட்டது.
இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களையோ அவர்களைப் பாதுகாத்தவர்களையோ மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர நாம் துணைபோகக் கூடாது.
சட்டத்தின் முன் அனைவரும் சமம். அரசியல்வாதியாக இருந்தாலும், மதகுருவாக இருந்தாலும், உயர் அதிகாரியாக இருந்தாலும் குற்றம் செய்தால் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.
குற்றங்களைக் கட்டுப்படுத்த முயலும் ஒருவரைத் தவறானவராகச் சித்தரிப்பது நியாயமல்ல. எமக்கு நாட்டைக் காக்கும் தலைமை வேண்டும்; கொள்ளையர்களையும் ஊழல்வாதிகளையும் காக்கும் தலைமை வேண்டாம்.
விமர்சனங்கள் வரும்; போகும். ஆனால் எமது நாட்டையும், உரிமைகளையும், வருங்கால சந்ததிகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதே முதன்மையானது.
