முழு அளவிலான ரஷ்யப் படையெடுப்பிற்கு மத்தியில் தனது நாட்டில் தேர்தல்களை நடத்துவது மிகவும் ஆபத்தானது என்று உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி , தேர்தலை நடத்துமாறு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்த அழைப்பிற்குப் பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற ஒரு போரில், தேர்தல்கள் என்பதே ஒரு பெரும் ஆபத்து என்று நான் நம்புகிறேன். தற்போதைய தேர்தல்கள், உக்ரைனைப் பிளவுபடுத்தும் ஒரு சுனாமியாகும்,” என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட கருத்துக்களில் ஜெலென்ஸ்கி கூறினார்.
படையெடுத்து வரும் ரஷ்யப் படைகளை எதிர்த்துப் போரிடுவதால், இராணுவச் சட்டம் அமலில் உள்ள நிலையில் நாட்டில் தேர்தல்கள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைக்குப் பொதுமக்களிடையே பரந்த ஆதரவு உள்ளது என ஜெலென்ஸ்கி தெரிவிக்கிறார்.
நாம் நாட்டை அழிக்க விரும்பினால், இந்தப் போர்க் காலங்களில் தேர்தல்களை நடத்தும் திசையில் நகரலாம், என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் மைக்கலோ ஃபெடோரோவின் முன்மொழிவை உறுதியாக நிராகரிக்கிறார் என ஜெலென்ஸ்கி கூறினார்.
ஜெலென்ஸ்கி தனது உரையில் ஃபெடோரோவை விமர்சித்து, அவர் தவறான பாதையை நோக்கித் தானாகவே செல்கிறார். அல்லது தள்ளப்படுகிறார், என்று நான் நம்புகிறேன் என்று கூறினார்.
