ஜனாதிபதி , நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியிலையே தனியார் காணிகள் விடுவிக்கப்பட்ட வேண்டும் எனும் நிலைப்பாட்டிலையே இருந்தார் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்
வலி.வடக்கில் நடைபெற்ற காணி விடுவிப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கால பகுதியில் , அவரும் அவரது கட்சியினரும் , தனியார் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்தார்கள். நாம் காணி விடுவிப்பு தொடர்பில் உரையாற்றும் போதெலலாம் ஆதரவு தெரிவித்தார்
தற்போதும் ஜனாதிபதி மக்களின் காணிகள் விடுவிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளார். அது தொடர்பில் வாக்குறுதிகளையும் வழங்கியுள்ளார்
நாம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஜனாதிபதியை சந்தித்த போதும் , காணி விடுவிக்கப்பட வேண்டும் எனும் எண்ணத்தில் தான் அவரும் உள்ளார்.
ஆனால் அவர் முப்படையினரிடம் கேட்டு தான் காணிகளை விடுவிக்க முடியும் என்பதனை எம்மால் ஏற்க முடியவில்லை. தற்போதும் விடுவிக்க கூடிய காணிகள் தொடரில் முப்படையிடம் அறிக்கை கோரியுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் காணி விடுவிக்கப்படும் என கூறுகிறார்
வலி. வடக்கு மக்கள் காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தான் தேசிய மக்கள் சக்தியினருக்கு வாக்களித்தனர். அந்த மக்களின் நம்பிக்கையை ஜனாதிபதி காப்பாற்ற வேண்டும்.
முப்படையினரும் காணியை விடுவிக்கும் நோக்கில் இல்லை. அவர்களிடம் ஜனாதிபதி காணி விடுவிப்பு தொடர்பில் அறிக்கை கேட்பது ஏற்புடையதல்ல. என மேலும் தெரிவித்தார்.
