யாழ்ப்பாண படைத்தலைமையகத்தை கிளிநொச்சிக்கு இடமாற்றம் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தரப்பு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – நாகர்கோவில் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற நாச்சிமார் ஆலய வளாகத்திலிருந்து இராணுவத்தினர் முழுமையாக வெளியேறியுள்ளனர்.
Tourist Destinations
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த குறித்த ஆலயப்பகுதியிலிருந்து, இராணுவத்தினர் எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளுமின்றி திடீரென செவ்வாய்க்கிழமை (27) அன்று வெளியேறியுள்ளனர். இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, நீண்ட காலத்தின் பின்னர் அப்பகுதிக்குச் சென்ற பக்தர்கள் தற்போது ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.
இருப்பினும், ஆலயத்திலிருந்து வெளியேறிய இராணுவத்தினர், அங்கிருந்த அனைத்துக் கட்டடங்களையும் இடித்துத் தரைமட்டமாக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.
எனினும் பலாலி உயர்பாதுகாப்பு வலயப்பகுதியிலுள்ள ஆலயங்கள் மற்றும் தேவாலயங்களிலிருந்து படையினர் வெளியேறவோ முகாம்களை மூடவோ பின்னடித்துவருவது குறிப்பிடத்தக்கது.