தென்னிலங்கை பாதாள உலக கும்பலின் பிரதான போக்குவரத்து மார்க்கமாக வடக்கு கடற்பரப்பு மாறியுள்ளது.
அவ்வகையில் பாதாள உலக கும்பலைச்சேர்ந்த இசாரா செவ்வந்திக்கு படகு வழங்கியவர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல உதவியதாகக் கூறப்படும் நபர் இலுப்பைக்கடவை காவல்துறை விசேட பணியகத்திடம் சிக்கினார்
மற்றொரு பாதாள உலக குமப்லைச்சேர்ந்த கனேமுல்ல சஞ்சீவ மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சந்தேக நபராகக் குறிப்பிடப்படும் இசாரா செவ்வந்தி, நாட்டிலிருந்து இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்குப் படகு வசதி ஏற்படுத்திக் கொடுத்ததாகக் கூறப்படும் நபரே மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம், மண்டைதீவு பகுதியைச் சேர்ந்தவரென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணைகளின்படி, இசாரா செவ்வந்தி சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்காக இவரே படகு வசதியை ஏற்படுத்திக் கொடுத்ததாகத் தெரியவந்துள்ளது.
