செம்மணியில் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட கிருசாந்தி வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாத காரணத்தினால் 600 வரையானவர்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கினார் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
“1999 ஆம் ஆண்டு பாடசாலை மாணவியான கிருசாந்தி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் செம்மணி பகுதியில் கடமையில் இருந்த இராணுவ கோப்ரல் ஒருவர் கொலை குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டார்.
அந்த இராணுவ கோப்ரல் இலங்கை அரசை நம்பாததன் காரணமாக பின்னணியில் இருந்தவர்களை வெளிப்படுத்துவதற்காக குறித்த பகுதியில் 600 வரையான உடல்கள் புதைக்கப்பட்டதாக சாட்சியம் வழங்கியிருக்கிறார்.
அவர் இந்த உண்மையை கூறாமல் விட்டிருக்கலாம் இருந்தும் செம்மணியில் பாரிய மனித படுகொலைகளின் பின்னால் இராணுவ உயர் அதிகாரிகள் இருந்ததன் காரணமாகவும் தன்னை காப்பாற்ற மாட்டார்கள் எனத் தெரிந்ததால் உண்மையை உளறிவிட்டார்.
அவர் அன்று கூறிய விடையங்கள் தற்போது உண்மையாகி சுமார் 600 வகையான எலும்புக்கூடுகள் அப்பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட வருகின்றதென கஜேந்திரகுமார் விளக்கமளித்துள்ளார்.
