யாழ்ப்பாணம் நல்லூர்ப் பகுதியில் இன்று (23.08.2026) இடம்பெற்ற கோர வீதி விபத்தில் கரவெட்டியைச் சேர்ந்த இளம் பொறியியலாளர் கந்தசாமி கோகுலதாஸ் (கோபு) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
யாழ். கரவெட்டி கிழக்கைப் பூர்வீகமாகவும், வவுனிக்குளத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட இவர், தனது திறமையால் இளம் வயதிலேயே பொறியியலாளராக உயர்ந்து பலரின் அன்பைப் பெற்றவர். இன்று நல்லூர் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக நடந்த இவ்விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இளம் பொறியியலாளரின் திடீர் மறைவு அவரது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே ஆறாத்துயரத்தை ஏற்படுத்தியுள்ளது
