யாழ்ப்பாணத்தில் கசிப்பு கோட்டை ஒன்று பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டு , 20 லீட்டர் கசிப்புடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்
வடமராட்சி துன்னாலை காட்டு பகுதியில் கசிப்பு உற்பத்தி இடம்பெற்று வருவதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் , குறித்த பகுதியை பொலிஸார் இன்றைய தினம் முற்றுகையிட்டனர்
அதன் போது அங்கிருந்தநபர்கள் தப்பியோடிய நிலையில் , இருவரை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன் , 20 லீட்டர் கசிப்பு , 540 லீட்டர் கோடா , கசிப்பு உற்பத்தி உபகரணங்கள் , மோட்டார் சைக்கிள் என்பவற்றை பொலிஸார் மீட்டுள்ளனர்
மீட்கப்பட்ட பொருட்கள் மற்றும் , கைது செய்யப்பட்ட இருவரையும் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தப்பியோடிய ஏனையவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்
